படித்ததில் பிடித்தது
அது ஒரு மந்தார முற்றம்
மழை ஓய்ந்துதூவானம்
தென்றலோடு
சல்லாபித்துக் கொண்டிருந்தது
அது
இன்னும் என்னுள்
சில்லிடுகிறது
பூமிக் கொண்டையில்
அழகாய் விரிந்து
கிடந்த பூ
அந்தியை நெருங்கி
செவ்விதழ் நீலக்கடலை உரசி
உச்சி முகர்ந்து கிடக்கிறது
மீட்டும் விழிகள்
மேலிழுத்து மேலிழுத்து
நிழற்படம் எடுக்கிறது
செம்மண் தீட்டிய தெருக்கள்
கிட்டிப்புள் கிளித்தட்டு வீதிகள்
அறுத்தோடி வெள்ளம் கடந்த தடங்கள்
ஆற்றோரத்துக் கீதங்கள்
வயலோரக் குருவிக்காவல்
தடம் வைத்து பிடித்த கிளிகள்
தும்பி பிடிக்க ஓடிய தருணங்கள்
ஆரம்பப்பள்ளியில் அம்மா பின் ஒழிந்த நிமிடங்கள்
ஏங்கி அழுத கேவல்கள்
ஆசான்கள் சூடிய அருமையான பட்டங்கள்
முன்னேறிய பாதைகள்
பள்ளிக்கு கள்ளமிட்ட நாட்கள்
கலைந்து கண்ணீர் மல்கிய கணங்கள்
கள்ளமாய் படித்த காதல் மடல்
புத்தகம் மறைத்த சினிமாப்பாடல்
புரிந்து கொள்ள மறுத்த காதல்கள்
தொலைத்துவிட்ட நிம்மதிகள்
மனதை பிசைந்த தோழனின் மரணம்
அப்பப்பா. ......
ஆழ்ந்த பெருமூச்சு. ........
இன்னும் எத்தனை எத்தனை
மீண்டும் ஒரு முறை வராதா. ....?
- பிரியத்தமிழ் -


Comments
Post a Comment